கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முகாம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு!

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ PM-SVANidhi திட்டத்தின் கீழ்‌ நடைபெற்ற சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன்‌ வழங்கும்‌ முகாமில்‌ 2000க்கும்‌ மேற்பட்ட சாலையோர வியாபாரிகள்‌ கலந்து கொண்ட நிலையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன்‌ வழங்கும்‌ முகாம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ PM-SVANidhi திட்டத்தின்கீழ்‌ நடைபெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்‌ வழங்கும்‌ முகாமில்‌ சுமார்‌ 2000-க்கும்‌ மேற்பட்ட சாலையோர வியாபாரிகள்‌ கலந்து கொண்டனர்‌. அவர்களில்‌ சுமார்‌ 500 சாலையோர வியாபாரிகளின்‌ விண்ணப்பங்கள்‌ இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

இவ்விண்ணப்பங்கள்‌ வங்கியாளர்களின்‌ சிறப்பு கவனத்துடன்‌ பரிசீலனைக்கு பிறகு கடன்‌ வழங்கப்பட உள்ளது. மேலும்‌, விடுபட்ட சுமார்‌ 1500 சாலையோர வியாபாரிகளின்‌ விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்யும்‌ பொருட்டு, இம்முகாம்‌ மேலும்‌ இரண்டு நாட்கள்‌ (08.09.2023 மற்றும்‌ 09.09.2023) வரை நீட்டிக்கப்படுகிறது.

எனவே, விடுபட்ட சாலையோர வியாபாரிகள்‌ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்‌ கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...