கோவை சுக்ரவார்‌ பேட்டை - தெலுங்கு வீதி இடையே குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் சாலை போக்குவரத்து மாற்றம்!

கோவை சுக்ரவார்‌ பேட்டை சாலை முதல்‌ தெலுங்கு வீதி வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் காரணமாக இன்று (07.09.2023) இரவு 10 மணி முதல் வரும் செப்.10ஆம் தேதி இரவு 10 மணி வரை அவ்வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை சுக்ரவார்‌ பேட்டை சாலை முதல்‌ தெலுங்கு வீதி வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ வார்டு எண்.73 மற்றும்‌ 81க்கு உட்பட்ட சுக்ரவார்‌ பேட்டை சாலை முதல்‌ தெலுங்கு வீதி வரை 24X7 திட்டத்தின் கீழ்‌ குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக 07.09.2023 இரவு 10 மணி முதல்‌ 10.09.2023 இரவு 10 மணி வரை சுக்ரவார்‌ பேட்டை வழியாக காந்திபார்க்‌ செல்லும்‌ கனரக வாகனங்கள்‌ மேட்டுப்பாளையம்‌ சாலை, திருவேங்கடசாமி சாலை வழியாக தடாகம்‌ சாலை அடைய வேண்டும்‌.

மேலும்‌ தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதி செல்லும்‌ கனரக வாகனங்கள்‌ டவுன்ஹால்‌ வழியாக செட்டி வீதி அடைந்து சலீவன்‌ வீதி வழியாக காந்திபார்க்‌ செல்ல வேண்டும்‌. எனவே, பொதுமக்கள்‌ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...