கோவையில் வரும் வியாழக்கிழமை சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என மாநகராட்சி அறிவிப்பு..!!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்‌ வழங்கும்‌ முகாம்‌ 07.09.2023 வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல்‌ 3.00 மணி வரை நடைபெறும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அறிவித்துள்ளார்.


கோவை: சிறப்பு கடன் வழங்கும் முகாமில் புதிதாக கடன்‌ பெறவும்‌, ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில்‌ கடனுக்காக விண்ணப்பித்து கடன்‌ கிடைக்காத வியாபாரிகள்‌, முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை பெற்ற வியாபாரிகள்‌ என அனைவரும்‌ ஆதார்‌ அட்டை, வங்கி கணக்கு புத்தகம்‌ மற்றும்‌ இதர ஆவணங்களுடன்‌ இம்முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌ என கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்‌ வழங்கும்‌ முகாம்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ 07.09.2023 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல்‌ 3.00 மணி வரை நடைபெறும்‌.

இதில்‌ புதிதாக கடன்‌ பெறவும்‌, ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில்‌ கடனுக்காக விண்ணப்பித்து கடன்‌ கிடைக்காத வியாபாரிகள்‌, முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை பெற்ற வியாபாரிகள்‌ என அனைவரும்‌ ஆதார்‌ அட்டை, வங்கி கணக்கு புத்தகம்‌ மற்றும்‌ இதர ஆவணங்களுடன்‌ இம்முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌.

இம்முகாமில்‌ வங்கியாளர்கள்‌ மூலம்‌ உடனடியாக கடன்‌ அனுமதி கடிதம்‌ வழங்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...