உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை பதிவுக்கான  கால அவகாசம் நீட்டிப்பு!

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லுாரியில் முதுநிலைப் பிரிவில், தமிழ் இலக்கியம் (40), ஆங்கில இலக்கியம் (20), பொருளியல் (20), வணிகவியல்(40),

சுற்றுலாவியல் (20), கணிதவியல் (20), புள்ளியியல் (15), இயற்பியல் (30), வேதியியல் (20), கணித அறிவியல் (40), உட்பட தற்போது 265 இடங்களுக்கான சேர்க்கை பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் வாயிலாக, www.tngasa.in என்ற இணை யதளத்தில் உடுமலை கல்லுாரி அரசு கலைக்கல்லுாரியை செய்து பதிவு செய்து கொள்ள ஆக.,22ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேர்க்கை பதிவுக்கான கால அவகாசம், செப்.,1வரை நீட் டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மாணவர்களின் தர வரிசைப்பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...