குழந்தைகள் நலக்குழுவில் காலி இடங்கள் - உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator - Rs.11,916/-) ஆகிய பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 11.09.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior Level) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator - Rs.11,916/-) ஆகிய பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior Level) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் 11.09.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் எனவும் விண்ணப்பங்களை https://coimbatore.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் - 641 018 என்ற முகவரிக்கு வரும் 11.09.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...