சாலையில் கால்நடைகளை திரியவிட்டால் உரிமையாளர் மீது வழக்கு - கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள், அவற்றின் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டம் விதித்தனர். இதேபோன்று சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


கோவை: விபத்து ஏற்படும் வகையில் சாலைகளில் சுற்றித்திரிந்த நான்கு மாடுகளையும், ஒரு குதிரையையும் பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் வ.உ.சி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளில் திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவை ரோடுகளில் கால்நடைகளை திரியவிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கால்நடைகள் 2-வது முறையாக மீண்டும் சாலைக்கு வந்தால், அவற்றை பிடித்து கோசாலையில் ஒப்படைத்து விடுவோம் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

ஆனாலும் கோவை மாநகர சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. இந்த நிலையில் 62-ம் வார்டுக்கு உட்பட்ட சாரமேடு, ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் ரோட்டில் திரிவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.



அப்போது அங்கு நடுரோட்டில் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு குதிரை ஆகியவற்றை சுற்றி வளைத்து பிடித்தனர்.



அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மாநகர போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், கால்நடைகளை வளர்ப்போர் வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...