உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி சேர்க்கை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு இடங்கள் உள்ளது. இதனால் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நேரடியாக மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை மே மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. தற்போது இடங்கள் இருப்பதால் வரும் 31ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள அரசு தொலைபயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை மே மாதம் 24ஆம் தேதி முதல் துவங்கியது.

ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்ய ஜூன் 7-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது குறிப்பிட்ட சில பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு இடங்கள் இருப்பதால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நேரடியாக சேர்க்கைக்கு பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...