போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள் - புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

கோவையில் பொதுமக்களுக்கும்‌, போக்குவரத்திற்கும்‌ இடையூறாக வீதிகள்‌, தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றித்‌ திரியும்‌ மாடுகளை பிடித்து கோசாலைகளுக்கு அனுப்ப பொதுமக்கள்‌ கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்க 0422-2302323 என்ற தொலைபேசி எண்ணிலும்‌, 8190000200 என்ற வாட்ஸ்‌ ஆப்‌ எண்ணிலும்‌ தொடர்பு கொண்டு புகார்‌ அளிக்கலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ அறிவித்துள்ளார்.



கோவை: கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றுத் திரியும் மாடுகள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்களை மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

கோயமுத்தூர்‌ மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில்‌ பொது மக்களுக்கும்‌, போக்குவரத்திற்கும்‌ இடையூறாக வீதிகள்‌, தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றித்‌ திரியும்‌ மாடுகளால்‌ சாலை விபத்து ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகள்‌ நிகழவும்‌ வாய்ப்புகள்‌ உள்ளது.

எனவே, சாலைகளில்‌ சுற்றித்‌ திரியும்‌ மாடுகளை பிடித்து கோசாலைகளுக்கு அனுப்பப்படும்‌.

மேலும்‌, இது குறித்த புகார்களுக்கு பொது மக்கள்‌ கோயமுத்தூர்‌ மாநகராட்‌சி கட்டுப்பாட்டு அறைக்கு 0422-2302323 தொலைபேசி எண்ணிலும்‌, 8190000200 என்ற வாட்ஸ்‌ ஆப்‌ எண்ணிலும்‌ தொடர்பு கொண்டு புகார்‌ அளிக்கலாம்‌.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...