சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் பெற, ஆறு மாதகால தையல் பயிற்சி முடித்த 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் உரிய சான்றுகளுடன், இ-சேவை மையத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் வழங்கப்படும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் வழங்கப்படும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/மண்டல அலுவலகங்களில் மகளிர் ஊர்நல அலுவலர்/சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யாமல் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் ஆறு மாதகால தையற்பயிற்சி முடித்த பெண்களிடமிருந்து (20 வயது முதல் 40 வயது முடிய) மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி விண்ணப்பத்துடன்

1. வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.72000/-க்குள்) வட்டாட்சியரிடம் பெறப்பட வேண்டும்.

2. இருப்பிடச்சான்று (வட்டாட்சியரிடம் பெறப்பட வேண்டும்) அல்லது குடும்ப அட்டை

3. ஆறு மாதகால தையற்பயிற்சி முடித்தமைக்கான சான்று.

4. வயது சான்று (20 வயது முதல் 40 வயது முடிய) கல்விச்சான்று அல்லது பிறப்புச்சான்று.

5. சாதிச்சான்று

6. கடவுச்சீட்டு அளவு மனுதாரர் கலர் புகைப்படம்.

7. விதவை கணவனால் கைவிடப்பட்டவர்; ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் எனில் உரிய சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்.

8. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை நகல்

ஆகிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, அம்மையார் நினைவு உரிய ஆவணங்களுடன் சத்தியவாணிமுத்துஇலவச தையல் இயந்திரம் வழங்கக் கோரும் விண்ணப்பத்தினை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும், வால்பாறை நகராட்சி அலுவலகத்திலும் உள்ள மகளிர் ஊர்நல அலுவலர்/சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...