குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக சிறப்பு தொழிற்கடன் விழா - தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு

கோவை கிளை அலுவலகத்தில் வரும் 21ஆம் தேதி தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 21.08.2023 முதல் 01.09.2022 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் பங்கேற்க வருமாறு தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி மற்றும் மானிய சலுகைகளை வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

கோவை கிளை அலுவலகத்தில் (முகவரி: கொடிசியா, GD நாயுடு டவர்ஸ், கதவு எண்A. ஒசூர் ரோடு. கோயமுத்தூர்) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 21.08.2023 முதல் 01.09.2022 வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டிஐஐசி (TIIC) -வின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (35% மானியம்) (AABCS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.50 வரை வழங்கப்படும். பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூடுதல் 5% மானியம் வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...