ஆசிரியர் பணிக்கான இலவச பயிற்சி - வரும் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 18.08.2023 அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஆசிரியர் பணி இலவச பயிற்சி வகுப்பில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளி), தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-1 மட்டும் அலுவலகத்திற்கு நேரில் எடுத்து வரவ வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 18.08.2023 அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு அறிக்கையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோராயமாக 6553 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோராயமாக 3587 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test), வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளி), தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-1 மட்டும் அலுவலகத்திற்கு நேரில் எடுத்து வரவும். மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...