சுதந்திர தினத்தை சிறப்பிக்க வருமாறு தேசபற்றாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு

நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் நாள் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வருமாறு தேசபற்றாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.



கோவை: கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க வருகின்ற 17ம் தேதி நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் (Our Sisters in Our ITI) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை 13.07.2023 முதல் நடைபெற்று வருகிறது. 

இதில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க வருகின்ற 17ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூர் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் (Our Sisters in Our ITI) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஆய்வகங்கள் பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள் பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு வருகை புரிபவர்களைக் கொண்டு Signature Campaign (கையெழுத்துஇயக்கம்) நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களால் செய்யப்பட்ட அனைத்து Project களை காட்சிப்படுத்தி விருந்தினர்கள் பார்வையிட உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை புரியும் விருந்தினர்களை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்கல்வி குறித்து பேச்சுப் போட்டி ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவை நடைபெற உள்ளது. முந்தைய ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி நிறைவு செய்து முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சியாளர்களைக் கொண்டு தொழிற் பயிற்சியின் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கோயம்புத்தூர் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் சகோதரிகள் பயிற்சி பெறும் நிலையில் உள்ள உறவினர் பெண்கள் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...