கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆகஸ்ட் 12ஆம் தேதி நடக்கிறது!

சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்டு 12ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டை, ஆதார், கல்வி சான்றிதழ்களின் அசல், நகலுடன் பங்கேற்கலாம்.


கோவை: கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்டு 12ம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்டு 12ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து தனியார் துறை மூலம் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெற்றோருடன் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமுடன் இணைத்து சுயதொழில் புரிபவர்களுக்கான மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அசல் மற்றும் நகலுடன், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கல்வி தகுதி சான்றுகள் அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...