உலக சுற்றுலா தின விருதுகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படவுள்ள சுற்றுலா விருதுகளுக்காக சுற்றுலா தொழிலில் ஈடுபடுவோர் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ள சுற்றுலா விருதுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

உலக சுற்றுலா தினத்தை (27.09.2023) முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா தொழிலில் ஈடுபடுவோர்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோரையும், தமிழ்நாட்டில் சுற்றுலா தொடர்புடைய தொழிலில் ஈடுபடுவோரை சுற்றுலா பயணமுகவர்கள் ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.

சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாகச சுற்றுலா, சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா விளம்பர பொருள் போன்ற 17 வகையான (17 Categories)சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தொழில் சார்ந்தவர்களும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27-09-2023) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். அதனை ஆகஸ்ட் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...