பெண்கள் பணியாற்றும் இடங்களில் உள்ளக புகார் குழு அமைக்காவிட்டால் அபராதம் - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

பெண்கள் பணியாற்றும் இடங்களில் கட்டாயமாக புகார் குழு அமைக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அந்த நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: பெண்கள் பணியாற்றும் இடங்களில் உள்ளக புகார் குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்பிற்காக பலதிட்டங்கள் மற்றும் சட்டங்களை இயற்றி உள்ளது.

அதன்படி பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் தடுப்பதற்காக மத்திய அரசால் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடைசட்டம் 2013 ஆண்டு நடை முறைபடுத்தப்பட்டது.

இச்சட்டத்தில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்ளக புகார் குழு அனைத்து அரசுதுறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் உள்ளக புகார்குழு தலைவராக ஒரு பெண் அலுவலரை நியமிக்க வேண்டும்.

இரண்டு நபர்களை உறுப்பினர்களாகவும், இத்துறையில் நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் எனவும் விசாரணைக்கான வழிமுறைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசு துறைகள், அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அரசு தொழிற்சாலைகள், அரசு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள்,

பயிற்சி நிறுவனங்கள், விற்பனை கடைகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லுாரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், இதர விற்பனைக்கடைகள் மற்றும் 10 பெண்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் தலைமை அலுவலகங்களில் Head of the Department) கட்டாயம் (Internal complaint committee) உள்ளக புகார்குழு அமைக்கப்பட வேண்டும்.

உள்ளக புகார் குழு அனைத்து தலைமை அலுவலகங்களிலும் உடனடியாக உள்ளக புகார் குழு அமைத்து அதன் விபரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் கோயம்புத்துார் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளக புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் அல்லது நிறுவனர்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் 2013-ன் படி ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...