கோவை ஆனைக்கட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் சேர்க்கை காலம் நீட்டிப்பு!

ஆனைக்கட்டியில் செயல்பட்டு வரும் பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் நேரடியாக சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: ஆனைக்கட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனைக்கட்டியில் செயல்பட்டு வரும் பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் நேரடியாக சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrician / Fitter/ MMV; Wireman மற்றும் Welder ஆகிய தொழிற்பிரிவுகள் (ஆண் பெண்) இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது.

பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை மேற்கொள்ளலாம். காலியாக உள்ள இடங்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

பயிற்சியில் சேர கல்வி தகுதி 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது வரை, மகளிருக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை, பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.

அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவ BUS PASS பிரதி மாதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை ரூ.750. விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படும்.

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் CAMPUS INTERVIEW மூலம் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு விடுதியின் காலியிடங்களை பொறுத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9043833546, 9442175780, 9486074384, 9994555884, 9443015904, 8380022133, 9486074384 989444892, 9842128234 என்ற கைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...