இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு (Agniveervayu) நியமன முறையின் படி 4 ஆண்டுகளுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்திய விமான படையில் திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் அக்னிவீர்வாயுவாக ஜனவரி 2024 முதல் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு (Agniveervayu) நியமன முறையில் சேர திருமணமாகாத ஆண், பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு (Agniveervayu) நியமன முறையின் படி நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்திய விமான படையில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் அக்னிவீர்வாயுவாக ஜனவரி 2024 முதல் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் பூர்த்தி செய்வதற்கான விரிவான வழிமுறைகள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.

இந்தத் தேர்வு அறிவிக்கை அக்னிவீர்வாயு உட்கொள்ளல் 2024 ஜனவரிக்கு செல்லுபடியாகும். மேற்படி அறிவிக்கை தொடர்பான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கி ஆகஸ்ட் 17 அன்று முடிவடையும்.

https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...