கனமழையால் பிர்லா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் - பொதுமக்கள் செல்ல தடை!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பிர்லா பால்ஸ் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இதனால், பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ஆற்றங்கரையோரம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பிர்லா பால்ஸ் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, இந்த கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆற்றின் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகள் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் செல்ல வேண்டாம் என்று வாகன ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறையில் 7.1 சென்டிமீட்டர் மழை அளவும் சோலையாறு அணையில் 7.2 சென்டி மீட்டர் மழை அளவும், நீராறு அணை பகுதியில் 8.2 சென்டி மீட்டர் மழை அளவும், அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 11.6 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.

இந்த மழையால் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிர்லா பால்ஸ் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...