கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்!

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் ஜூலை 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 26ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருகின்ற ஜூலை 26ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இதில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...