கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!

கோவை பந்தயசாலை துணை மின்நிலையத்தில் நாளைய தினம் (18ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, பந்தயசாலை, அண்ணாசிலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அடுத்த ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக நாளை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பந்தயசாலை துணை மின்நிலையத்தில் நாளை (18ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, பந்தயசாலை, அண்ணாசிலை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலான பந்தயசாலை பகுதி, கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரையான திருச்சி ரோடு, சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரையான புலியகுளம் ரோடு, ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர், பாப்பம்மாள் லே அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு கோவை பந்தயசாலை மின்வாரிய செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...