மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களில் பயன்பெற இ-சேவை தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ‘இ சேவை’ தளம் வழியாகவோ அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு ‘இ சேவை’ தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை தளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கி கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவற்றை விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 2023 முதல் அத்திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...