ஜூலை 12-ல் கோவை செஞ்சேரிப்புதூரில் மக்கள் தொடர்பு முகாம்!

சூலூர் அடுத்த செஞ்சேரிப்புதூரில் உள்ள சஞ்சீவி மஹாலில் வரும் ஜூலை 12ஆம் தேதி காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் செஞ்சேரிப்புதூரில் வரும் ஜூலை 12ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செஞ்சேரிப்புதூரில் உள்ள சஞ்சீவி மஹாலில் வரும் ஜூலை 12ஆம் தேதி காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு நாளை அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் தெற்கு வருவாய் கோட்டாட்சியர், செஞ்சேரிப்புதூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களிடம் முன் மனுக்களை பெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெறப்பட்ட முன் மனுக்கள் சம்மந்தான துறை அலுவலர்கள் மூலம் விசாரணை மேற்கொண்டு 12ம் தேதி நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...