கோவையில் நாளை (ஜூலை 8) மாவட்ட அளவிலான இளைஞர்திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம்!

பொள்ளாச்சியில் நாளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 8வது முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, ITI பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு.


கோவை: கோவையில் நாளைய தினம் மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர்திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் 8ம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள டாக்டர். மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் DDUGKY திட்டத்தின்கீழ் Restaurant caption, Security Supervisor, Facility Management Executive, Retail Sales Associate, Customer Care Executive BPO Non Voice Field Technician and Computing Pheriperal, General Duty Assistant, Documentation Executive, Business Correspondent & Business Facilitator ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதேபோல், RSETI திட்டத்தின் கீழ், Beauty parlour Management. Women's Tailor, Candle making, Pickle and Masala Powder, Costume Jewellary, Bee Keeping ஆகிய பயிற்சிகளும் மற்றும் TNSDC திட்டத்தின் கீழ் IT-ltes, Apparel, Automotive, Textiles and Handlooms, Healthcare போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன.

8-வது முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, ITI பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...