சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி - நேரில் சென்று கணக்கெடுக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவையில் PM-SVANidhi திட்டத்தின்கீழ்‌ பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும்‌ வியாபார சான்றிதழ்‌ வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் நேரில் சென்று கணக்கெடுக்கவும், வியாபாரிகள் உரிய ஆவணங்களை வழங்கி ஒத்துழைக்கவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவு.



கோவை: கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் நேரில் சென்று கணக்கெடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சி உட்பட்ட பகுதியில்‌ PM-SVANidhi திட்டத்தின்கீழ்‌ பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும்‌ வியாபார சான்றிதழ்‌ வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள்‌ வியாபாரிகளின்‌ இடங்களுக்கே நேரில்‌ வந்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்வார்கள்‌. 

எனவே, அனைத்து சாலையோர வியாபாரிகளும்‌ ஆதார்‌ அட்டை, வாக்காளர்‌ அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம்‌ மற்றும்‌ குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன்‌ கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...