ஆகஸ்ட் மாதத்திற்குள் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் - கோவை மாநகராட்சி அறிவிப்பு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ ஓய்வூதியதாரா்கள்‌ / குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகஸ்ட்‌ மாதத்திற்குள்‌ வாழ்நாள்‌ சான்றை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், செப்டம்பர் மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை: கோவை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதிய தாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

அரசாணை எண்‌.165, நிதி (ஓய்வூதியம்‌) த்துறை நாள் 31.05.2023-ன்‌ படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ ஓய்வூதியதாரா்கள்‌ / குடும்ப ஓய்வூதியதாரா்களில்‌ ஏப்ரல்‌, மே, ஜூன்‌, ஜூலை ஆகிய மாதங்களில்‌ ஓய்வு பெற்ற குடும்ப ஓய்வூதியம்‌ அனுமதிக்கப்பட்ட (பணியாளர்‌ / ஓய்வூதியதாரர்‌ காலமான மாதம்‌) ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2023 மாதம்‌ முழுவதும்‌ வேலை நாட்களில்‌ காலை 11 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ வாழ்நாள்‌ சான்று பெறப்படும்‌. 

மேலும்‌, ஆகஸ்ட்‌ 2023-க்குள்‌ வாழ்நாள்‌ சான்று வழங்காத ஓய்வூதியதாரர்கள்‌ / குடும்ப ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம்‌ செப்டம்பர்‌ 2023-ல்‌ நிறுத்தம்‌ செய்யப்படும்‌.

ஆகஸ்ட்‌ முதல்‌ மார்ச்‌ வரை ஓய்வு பெற்ற / குடும்ப ஓய்வூதியம்‌ அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம்‌ / குடும்ப ஓய்வூதியம்‌ அனுமதிக்கப்பட்ட அந்தந்த மாதத்தில்‌ வாழ்நாள்‌ சான்று சமர்ப்பிக்க வேண்டும்‌.

ஓய்வூதியம்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியம்‌ ஆகிய இரண்டு ஓய்வூதியமும்‌ பெறும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ ஓய்வு பெற்ற மாதத்தில்‌ இரண்டு ஓய்வூதியத்திற்கான வாழ்நாள்‌ சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...