கோவையில் வரும் ஜூன் 27-ல் முன்னாள் படை வீரர்களுக்கான சுய தொழில் முனைவோர் கருத்தரங்கு!

கோவை மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வரும் ஜூன் 27ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படை வீரர்களுக்கான சுய தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது



கோவை: கோவையில் வரும் ஜூன் 27ம் தேதி முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக சுயதொழில் நடத்திட ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர் கருத்தரங்கு வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் ஜூன் 27ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தலைமையில் இந்த தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 

இக்கூட்டத்தில் வங்கி மேலாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சுயதொழில் மற்றும் கடனுதவி திட்டங்கள் பற்றி விளக்க உள்ளனர். சுய வேலைவாய்ப்பு மூலம் தொழில் செய்ய விரும்பும் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...