அனுவாவி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு - வனத்துறை அறிவிப்பு!

யானைகள் நடமாட்டம் காரணமாக துடியலூர் அடுத்த அனுவாவி சுப்பிரமணியர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்குமாறு வனத்துறை தெரிவித்துள்ளது.



கோவை: பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவிலுக்கு செல்ல நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை அறிவித்துள்ளனர்.

கோவையில் சமீப நாட்களாக மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் பக்தர்கள் செல்லும் வழி பாதையில் காட்டு யானை கடந்து சென்றது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவில் நடைபாதையிலும் அடிக்கடி யானைகள் வருகின்றன. இதனை அடுத்து காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சமூக அலுவலர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அனுவாவி சுப்பிரமணியர் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தற்போது நேர கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்குமாறும் இது குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்திடும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைத்து கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறு கோவில் நிர்வாகத்தை வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தவறும் பட்சத்தில் மனித யானை மோதல் ஏதேனும் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...