9வது முறையாக கோவை - சேலம் பயணிகள் ரயில் ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - சேலம் இடையேயான பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 மாதத்தில் கோவை - சேலம் பயணிகள் ரயில் தற்போது 9 வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை - சேலம் இடையேயான பயணிகள் ரயில் கடந்த 8 மாதத்தில் 9வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் பயணிகள் ரயில், கடந்த எட்டு மாதங்களில், ஒன்பதாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்துக்கு பயணிகள் ரயில் (06802) இயக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு நவ., முதல் தொடர்ந்து, எட்டு மாதங்களாக இந்த பராமரிப்பு பணியை காரணம் காட்டி ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 18ம் தேதி முதல், பயணிகள் ரயில் இயங்கும் என எதிர்பார்த்த நிலையில், வரும் 30ம் தேதி வரை ரயில் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

இவ்வாறு அறிவிப்பது, இது ஒன்பதாவது முறை. சேலம் - ஈரோடு இடையே தண்டவாள பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதே, ரயில் ரத்துக்கு காரணம் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - சேலம் பயணிகள் ரயிலை இயக்கினால், ஏராளமானோர் பயனடைவர்; விரைவில் ரயிலை இயக்க நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...