கோவையில் நாளை முதல் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம்!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌ ஆதரவற்ற தெருநாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும்‌ வெறிநோய்‌ தடுப்பூசி செலுத்தும்‌ சிறப்பு முகாம்‌ நாளை முதல்‌ ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் அறிவித்துள்ளார்.



கோவை: கோவையில் நாளை முதல் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில்‌ உள்ள ஆதரவற்ற தெருநாய்களை கட்டுப்படுத்தும்‌ பணியானது, இரண்டு தொண்டு நிறுவனங்கள்‌ மூலம்‌ நடைபெற்று வருகிறது. 

பிராணி மித்ரன்‌ என்ற தொண்டு நிறுவனத்திற்கு கிழக்கு, தெற்கு மற்றும்‌ மத்திய மண்டலங்கள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, மாநகராட்சியின்‌ மூலம்‌ இரண்டு ஆதரவற்ற தெருநாய்கள்‌ பிடிக்கும்‌ வாகனங்கள்‌ அளிக்கப்பட்டுள்ளது.

Human Animal Society (45) என்ற தொண்டு நிறுவனத்திற்கு மேற்கு, வடக்கு மண்டலங்கள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு, தெருநாய்கள்‌ பிடிக்கும்‌ வாகனம்‌ ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும்‌, சீரநாயக்கன்பாளையம்‌, ஒண்டிப்புதார்‌, உக்கடம்‌ ஆகிய பகுதிகளில்‌ ஆதரவற்ற நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களின்‌ மூலம்‌ ஆதரவற்ற தெருநாய்களுக்கு சட்டப்படி கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும்‌ தெருநாய்களுக்கு வெறிநோய்‌ தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும்‌, பொதுமக்கள்‌ தெருநாய்கள்‌ சம்பந்தமான புகார்‌ எண்கள்‌: 9944434706 (பிராணி மித்ரன்‌), 9366127215 (Human Animal Society) ஆகிய தன்னார்வலர்களின்‌ தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டும்‌, மேலும்‌ சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்கள்‌, சுகாதார ஆய்வாளார்கள்‌ மற்றும்‌ சுகாதார அலுவலா்கள்‌ தொடர்பு கொண்டும்‌ புகார்‌ தெரிவிக்கலாம்‌.



இதன்‌ மூலமாக, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ சுற்றித் திரியும்‌ ஆதரவற்ற தெருநாய்களின்‌. எண்ணிக்கை விரைவில்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ கொண்டு வரப்படும்‌. தற்போது சாலை மற்றும்‌ தெருக்களில்‌ போக்குவரத்திற்கும்‌ பொதுமக்களுக்கும்‌ இடையூறு ஏற்படுத்துவதால்‌ தன்னார்வலர்களைக்‌ கொண்டு வாகனங்கள்‌ மூலம்‌ தெருநாய்களை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்களும்‌ தன்னார்வலார்களுக்கு மாநகராட்சி மேற்கொள்ளும்‌ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். 

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...