கோவையின் பல்வேறு இடங்களில் நாளை மின்வெட்டு - மின்சார வாரியம் அறிவிப்பு!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதன் காரணமாக ஆவாரம்பாளையம், புராணி காலனி, நவ இந்தியா ரோடு, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு.

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. ஆகையால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். 

இதன் காரணமாக ஆவாரம்பாளையம், புராணி காலனி, கணேஷ்நகர், காமதேனு நகர், நவ இந்தியா ரோடு, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாப்புதூர், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம் (பாப்பநாயக்கன்பாளையம்), புதியவர் நகர் பகுதி, காந்திமாநகர் ஒரு பகுதியில் மின்தடை ஏற்பட உள்ளது.

மேலும், சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி புதூர், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி), லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, ஹவுஸிங் யூனிட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...