கோவை லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!

கோவை - அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் பகுதி வரை ரூ.1.621 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணியின் காரணமாக லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை - அவிநாசி சாலையில் மேம்பால தூண்கள் அமைக்கும் பணியின் காரணமாக லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கோவை - அவினாசி சாலையில் உப்பிலி பாளையம் முதல் கோல்டு வின்ஸ் பகுதி வரை ரூ.1.621 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இப்பணிக்காக 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டன. தற்போது வரை 280க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கப்படும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

அதன்படி, தற்போது லட்சுமி மில் சந்திப்பில் தூண்கள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறையினர் கூறியதாவது, நவ இந்தியா சந்திப்பு, புலியகுளம் சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள், லட்சுமி மில் சிக்னல் அருகே சில மீட்டர் தூரம் தள்ளியுள்ள சர்க்கியூட் ஹவுஸ் சாலையில் உள்ள இடை வெளி வழியாக யூடர்ன் செய்து காந்திபுரம் செல்லலாம். 

காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு வழியாக புலியகுளம், அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பை அடைந்து அவிநாசி சாலையில் இடதுபுறம் திரும்பி, சில மீட்டர் தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ள இடைவெளி வழியாக யூடர்ன் செய்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

இதே யூடர்ன் வழியாக குப்புசாமி நாயுடு மருத்துவமனை சந்திப்பில் இருந்தும், புலியகுளம் செல்லும் வாகனங்களும் செல்லலாம். நவஇந்தியா சந்திப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு நோக்கி வருபவர்கள் மீண்டும் நவஇந்தியாவுக்கு யூடர்ன் செய்து செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன் கூறியதாவது, அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், சிக்னலுக்காக காத்திருக்காத வகையிலும், யூடர்ன் செய்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சீராகசென்று வருகின்றன .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...