கோவையில் இருந்து வாரத்தில் 4 நாட்களுக்கு திருப்பதிக்கு ரயில்!

கோவை - திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை தோறும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயிலானது, வாரத்துக்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது. அதன்படி கோவை - திருப்பதி விரைவு ரயில் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரத்திற்கு ஒரு நாள் இயக்கப்பட்டு வந்த ரயிலானது, வாரத்திற்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயணித்து திருப்பதிக்கு சென்று வந்தனர். இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் ரயிலை கூடுதல் நாட்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் எழுந்தது. இந்த நிலையில் கோவை - திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வந்த ரயில், நிரந்தரமாக வாரத்துக்கு 4 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை - திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை தோறும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயிலானது, வாரத்துக்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது.

அதன்படி கோவை - திருப்பதி விரைவு ரயில் (எண்:22616) செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். 

திருப்பதி - கோவை ரயில் (எண்: 22615) திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு, அதே நாள் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும். 

இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...