உதகை - மேட்டுப்பாளையம் சாலை மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றம்!

கோடை சீசன் காரணமாக சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட குன்னூர் - மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் ஆகிய 2 நெடுஞ்சாலைகளும் மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் ஆகிய 2 நெடுஞ்சாலைகளும் மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து குன்னூர் -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை இரு பாதைகளும் ஒருவழிப்பாதைகளாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றியமைக்கப்பட்டது. 

கோவை - மேட்டுப்பாளையம் வழியாக உதகை செல்லும் வாகனங்கள் காட்டேரி - குன்னூர் வழியாகவும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம்-கோவை ஈரோடு என செல்லும் வாகனங்கள் உதகையிலிருந்து கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் வாகனங்களை கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் - குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் கீழ்நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. 

இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக உள்ளூர் வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்காமல் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...