கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், எரிசாராயம் விற்பனை செய்தல், வெளி மாநில மதுபானங்களை பதுக்கி வைத்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் காவல்துறைக்கு 76049 10581 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.



கோவை: மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் காவல்துறைக்கு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், எரிசாராயம் விற்பனை செய்தல், வெளி மாநில மதுபானங்களை பதுக்கி வைத்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் காவல்துறைக்கு அளிக்கலாம்.

இதற்காக தொடங்கப்பட்டு உள்ள 76049 10581 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் பெறப்படும் தகவல்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்பவரின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...