ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கான தமிழக அரசின் நிதியுதவி பெற கால நீட்டிப்பு அறிவிப்பு


தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்துவர்கள் à®œà¯†à®°à¯à®šà®²à¯‡à®®à¯ புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது டிசம்பர் 16ம் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் விண்ணப்பிக்க விரும்பும் கிறித்துவர்கள் டிசம்பர் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807 (5 வது தலம்), அண்ணாசாலை, சென்னை- 600 002 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இவ்விண்ணப்பங்கள் பெற கோவை மாவட்ட கிறித்துவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...