கோவையில் அனுமதியின்றி ஸ்பா, மசாஜ் பார்லர் மற்றும் முடி திருத்த நிலையம் நடத்த கூடாது - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

கோவை‌ மாநகராட்சியில்‌ முடி திருத்த நிலையம்‌, அழகு நிலையம்‌, ஸ்பா மற்றும்‌ மசாஜ்‌ பார்லர்‌, நீராவி குளியல்‌ தொட்டியுடன்‌ கூடிய முடி திருத்தம்,‌ முடி சவரம்‌ தொழில்‌ செய்யும்‌ நிலையங்கள்‌ மாநகராட்சியின்‌ அனுமதியின்றியும், உரிய உரிமம்‌ இன்றியும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



கோவை: கோவையில் ஸ்பா, மசாஜ் பார்லர் மற்றும் முடி திருத்த நிலையம் ஆகியவற்றை மாநகராட்சியின் அனுமதியின்றியும், உரிய உரிமம் இன்றியும் நடத்தக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை‌ மாநகராட்சியில்‌ முடி திருத்த நிலையம்‌, அழகு நிலையம்‌, ஸ்பா மற்றும்‌ மசாஜ்‌ பார்லர்‌, நீராவி குளியல்‌ தொட்டியுடன்‌ கூடிய முடி திருத்தம்,‌ முடி சவரம்‌ தொழில்‌ செய்யும்‌ நிலையங்கள்‌ மாநகராட்சியின்‌ அனுமதியின்றி 01.02.2023 முதல்‌ உரிமம்‌ இன்றி நடத்தக்கூடாது. 

மேலும்‌, உரிம விண்ணப்ப கடிதத்தில்‌ காவல்‌ துறையினரின்‌ தடையின்மை சான்றும்‌, கோயம்புத்தார்‌ மாநகராட்சி மாநகர நல அலுவலரின்‌ தடையின்மை‌ சான்றும்‌ பெறப்பட வேண்டும்‌. இச்சான்றிதழ்கள்‌ இல்லாவிடில்‌ உரிமத்திற்காக விண்ணப்பிக்க இயலாது.

மேற்காணும்‌ நிறுவனங்கள்‌ தங்களுக்கு உரிய நிறுவனத்திற்கான உரிமத்‌ தொகையானது சாதாரண முடிதிருத்தும்‌ நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.200-ம்‌ மற்றும்‌ அதே நிறுவனங்கள்‌ குளிர்சாதன வசதிகள்‌ பொருத்தப்பட்டு இருக்குமாயின்‌ ரூ.1000-ம்‌ மற்றும்‌ அழகு நிலையம்‌, ஸ்பா, மசாஜ்‌ பாலார்‌ மற்றும்‌ நீராவி குளியல்‌ தொட்டியுடன்‌ கூடிய முடி திருத்தம்‌ போன்ற நிறுவனங்கள்‌ 500 சதுரடி வரை என்றால்‌ 5000 ரூபாயும் செலுத்த வேண்டும். 

மேலும், 501 முதல்‌ 1000 சதுரடி வரை ரூ.10,000-ம்‌, 1000 சதுரடிக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.15,000-ம்‌ வருடாந்திர உரிமத்தொகை கட்டணமாக மாநகராட்சியில்‌ செலுத்தி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது

இவ்வாறு மாநகராட்சி ஆணைய‌ பிரதாப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...