தமிழக முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் - வைப்பு நிதி பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவிப்பு!

முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முதிர்வு தொகையை பெறும் பொருட்டு, தங்களது வைப்புநிதி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கோவை ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் தங்கள் வைப்புநிதி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், ஊரகப் பகுதியில் உள்ளவர்கள் தங்களது வைப்பு நிதி பத்திரத்தை சமர்ப்பித்து முதிர்வு தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (பி.டி.ஓ) உள்ள மகளிர் ஊர்நல அலுவலர், விரிவாக்க அலுவலர்களை நேரில் சந்தித்து, முதிர்வுத் தொகையினை பெறும் பொருட்டு, வைப்பு நிதி பத்திரத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல் நகர்ப்புற பகுதியில் உள்ளவர்கள், அந்தந்த பகுதிக்கான மண்டல அலுவலகங்களில் உள்ள மகளிர் ஊர்நல அலுவலர் விரிவாக்க அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்களிடம் ஒப்படைக்கவும். நேரில் செல்லும் பொழுது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும் நேரில் சென்று பயன்பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...