வால்பாறை வட்டார பகுதிகளில் நாளை (மே.15) மின்தடை ஏற்படும் - மின்சார வாரியம் அறிவிப்பு!

வால்பாறை அடுத்த ஐயர்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பிகளில் உரசும் மரங்களை வெட்டும் பணிகள் நாளைய தினம் (மே.15) நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர் ஃபால்ஸ், ஹை ஃபாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.


கோவை: வால்பாறை அடுத்த ஐயர்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஐயர்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வால்பாறை வட்டார பகுதியான ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஷ், உருள்கள், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி, முதலிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், அந்நாளில் மின்பாதையின் அருகே உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற பணி நடைபெறும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...