கோவை அருகே நவக்கரையில் 17ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்!

கோவை மாவட்டம் நவக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வருகின்ற 17ம் தேதி மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: நவக்கரையில் வருகின்ற 17ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், நவக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வருகின்ற 17ம் தேதி மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி வருகின்ற 10ம் தேதி அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் தெற்கு வருவாய் கோட்டாட்சியர், மாவுத்தம்பதி கிராம நிர்வாக அலுவலகத்தில் மற்றும் மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களிடம் முன் மனுக்களை பெற உள்ளார்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம் எனவும், மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 17ம் தேதி நவக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்க உள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...