உடுமலை அடுத்த கிளுவன்காட்டூர் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை!

உடுமலை அருகேயுள்ள கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளைய தினம் (02.05.2023) எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அடுத்த கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடுமலை இயக்குதலும் பேணுதலும் செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளைய தினம் (02.05.2023) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதன் படி, எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்ப நாயக்கனூர் மற்றும் ஆலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

அப்போது மின் பாதைகளின் அருகில் மற்றும் உயரமாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற பொதுமக்கள் விவசாயிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...