சொத்துவரியில்‌ 5 சதவீத ஊக்கத்தொகை பெற கடைசி வாய்ப்பு - கோவை மாநகராட்சி ஆணையர்‌‌ தகவல்!

கோவை மாநகராட்சியில் நடப்பாண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை பெற கடைசி வாய்ப்பாக வரும் ஏப்ரல் 29, 30 ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு வரிவசூல் முகாம்களை பயன்படுத்திக் கொண்டு ஊக்கத்தொகையை பெறலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.



கோவை: வரும் 29, 30ஆம் தேதிகளில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை பெற கடைசி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2023-24ஆம்‌ நிதியாண்டின்‌ முதல்‌ அரையாண்டுக்கான சொத்து வரியினை 30.04.2023க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமையாளாகளுக்கு தங்களது சொத்துவரி தொகையில்‌ 5% ஊக்கத்தொகை பெற கடைசி வாய்ப்பாக வருகின்ற 29.04.2023 மற்றும்‌ 30.04.2023 ஆகிய சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ மாநகராட்சியின்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ காலை 9.00மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை செயல்படும்‌.

மேலும்‌, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ வார்டு எண்கள்‌ 22, 24க்கு கொடிசியா - தமிழ்நாடு மின்சார வாரிய‌ அலுவலக பகுதிகளிலும்‌, வார்டு எண்கள்‌ 07, 08 மற்றும்‌ 23க்கு நேரு நகர் பகுதியிலும்‌, வார்டு எண்கள்‌ 56,57 மற்றும்‌ 58க்கு ஒண்டிப்புத்தூர் நெசவாளர்‌ காலனியிலும்‌ சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளன. 

வார்டு எண்கள்‌ 54, 55 மற்றும்‌ 59க்கு எஸ்‌.ஐ.எச்‌.எஸ்‌. காலனி பள்ளியிலும்‌, வார்டு எண்கள்‌ 50,51,52 மற்றும்‌ 53க்கு உடையாம்பாளையம்‌ பள்ளியிலும்‌ சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளன. 

மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில்‌ 29.04.2023 சனிக்கிழமையன்று வார்டு எண்‌.17க்கு கவுண்டம்பாளையம்‌ தென்றல்‌ நகர் ஐடிஐ பின்புற பகுதியிலும்‌, வார்டு எண்‌.34க்கு கவுண்டம்பாளையம்‌ - பூம்புகார்‌ நகர் மணி மஹாலிலும்‌, வார்டு எண்‌.37ல்‌ வடவள்ளி கல்வீரம்பாளையம்‌ மாகாளியம்மன்‌ கோவில்‌ வீதி பகுதியிலும் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளன. 

வார்டு எண்‌.38ல்‌ வடவள்ளி பாலாஜி நகர் புவனேஸ்வரி அம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு எண்‌.39ல்‌ சுண்டபபாளையம்‌ பெருமாள்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு 40-ல்‌ வீரகேரளம்‌ சித்தி விநாயகர்‌ கோவில்‌ வளாகத்திலும்‌ சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

30.04.2023-ல் கவுண்டம்பாளையம்‌ தென்றல்‌ நகர் ஐடிஐ பின்புற பகுதியிலும்‌, வார்டு 33க்கு கவுண்டம்பாளையம்‌ பியூன்ஸ்‌ காலனி மாரியம்மன்‌ கோவில்‌ அருகிலும்‌, வார்டு 34க்கு கவுண்டம்பாளையம் ‌- பூம்புகார்‌ நகர் மணி மஹால்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.36-ல்‌ நியூ தில்லை நகர் குடியிருப்போர் நல சங்கம்‌ 5 வது வீதியிலும்‌ சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளன. 

வார்டு 38-ல்‌ வடவள்ளி விநாயகர் கோவில்‌ வளாகம்‌-ஐ.ஓ.பி காலனியிலும்‌, வார்டு 39ல்‌ சுண்டப்பாளையம்‌ பெருமாள்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு எண்‌.40ல்‌ வடவள்ளி வி.என்‌.ஆர்.நகர் ரேஷன்‌ கடை அருகிலும்‌ மற்றும்‌ வார்டு 73-ல்‌ பொன்னையராஜபுரம்‌ சுகாதார ஆய்வாளா்‌ அலுவலகத்திலும்‌சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளது. 

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ வார்டு 87ல்‌ குனியமுத்தூர்‌ மாநகராட்சி துவக்கப்பள்ளி - ஆயிஷா மஹால்‌ முன்புறப்‌ பகுதியிலும்‌, 89-ல்‌ சுண்டக்காமுத்தூர் - சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்திலும்‌, வார்டு 90ல்‌ கோவைப்புதூர்‌ - சிறுவாணி நகர் பகுதியிலும் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளன. 

வார்டு எண்‌.94 மாச்சாம்பாளையம்‌ - மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு எண்‌.97-ல்‌ பேஸ்‌2 ஹவுசிங்‌ யூனிட்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.100-ல்‌ சீனிவாசபுரம்‌ பூங்கா பகுதியிலும்‌ நடைபெறவுள்ளது.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ சனி மற்றும்‌ ஞாயிற்று கிழமைகளில்‌ வார்டு எண்‌.28-ல்‌ மாநகராட்சி வடக்கு மண்டல வரிவசூல்‌ மையத்திலும்‌, வார்டு எண்கள்‌ 29,30க்கு சங்கனூர்‌ -ராயப்ப டேங்க்‌ வரிவசூல்‌ மையத்திலும்‌, வார்டு எண்கள்‌ 20,21க்கு சக்தி ரோடு - எம்‌.எஸ்‌.ஆர்‌. டேங்க்‌ வரிவசூல்‌ மையத்திலும்‌ வரி வசூல் செய்யப்படும். 

வார்டு எண்கள்‌ 4,10,11க்கு சரவணம்பட்டி பிரிவு அலுவலக வரிவசூல்‌ மையத்திலும்‌, வார்டு எண்கள்‌. 3,12க்கு சின்னவேடம்பட்டி பிரிவு அலுவலக வரிவசூல்‌ மையத்திலும்‌ வார்டு எண்கள்‌ 2,13 மற்றும்‌ 14 க்கு வெள்ளகிணறு பிரிவு அலுவலக வரிவசூல்‌ மையத்திலும்‌, வார்டு எண்கள்‌ 1,15க்கு துடியலூர் பிரிவு அலுவலக வரிவசூல்‌ மையத்திலும்‌ வரி வசூல் செய்யப்படும். 

வார்டு எண்‌.18க்கு ராமசாமி நகா்‌ - கவுண்டம்பாளையம்‌ வரிவசூல்‌ மையத்திலும்‌, வார்டு எண்கள்‌.26,27க்கு பீளமேடு-பயனீயர் மில்‌ ரோடு வரிவசூல்‌ மையத்திலும்‌, வார்டு எண்‌.28க்கு ஆவாரம்பாளையம்‌ - காமதேனு நகா்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்திலும்‌, வார்டு எண்‌ 19க்கு மணியகாரன்பாளையம்‌ அம்மா உணவகத்திலும்‌ மற்றும்‌ வார்டு 25க்கு காந்திமாநகர் - மாநகராட்சி பள்ளியிலும்‌ நடைபெறவுள்ளது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ 29.04.2023 சனிக்கிழமையன்று வார்டு எண்‌. 32-ல்‌ சிறுவர்‌ பூங்கா, சங்கனூர்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு எண்‌. 62 மாநகராட்சி ஆரம்ப பள்ளி சாரமேடு, வார்டு எண்‌.63ல்‌ ஒலம்பஸ்‌ - 80 அடி ரோட்டில்‌ உள்ள மாநகராட்சி வணிக வளாகம்‌, வார்டு எண்‌.49-ல்‌ பாப்பநாய்க்கன்பாளையம் ‌-மாநகராட்சி நடுநிலை பள்ளியிலும்‌, வார்டு எண்‌.83ல்‌ தொட்ராயன்‌ கோவில்‌ ரோடு -மாநகராட்சி வணிக வளாகத்திலும்‌ நடைபெற உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி சொத்து வரி செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகயை பெறலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...