ஏப்ரல் மாத மின்கட்டணம் - மானூர்பாளையம் மின்நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு

தாராபுரம் அருகிலுள்ள மானூர்பாளையம் மின்பிரிவு மின்நுகர்வோர்கள் ஏப்ரல் மாத மின்கட்டணத்தைச் செலுத்தலாம் என தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


தாராபுரம்: மானூர்பாளையம் மின்பிரிவு மின்நுகர்வோர்கள் பிப்ரவரி மாத மின்கட்டணத்தைச் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மானூர்பாளையம் மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட காசிலிங்கபாளையம், நிறையூர், பெரியகுமாரபாளையம், மேற்கு சடையம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.

எனவே, மின் நுகர்வோர் கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை ஏப்ரல் மாதத்திற்கும் செலுத்தலாம். இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...