கோவை - திருப்பதி ரயில் சுற்றுலாத் திட்டம் : முன்பதிவு அறிவிப்பை வெளியிட்டது ஐ.ஆர்.சி.டி.சி!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் கோவையில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் கீழ் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கோவை: கோவையிலிருந்து திருப்பதிக்கு இரண்டு நாள் சுற்றுலாவாக ரயில் மூலம் பயணிக்க விரும்புவர்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஐஆர்சிடிசி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,திருப்பதி பாலாஜி தரிசன சுற்றுலா திட்டத்தின் கீழ், ஓர் இரவு, 2 நாட்கள் கொண்ட சுற்றுலாவில் திருமலை,காளஹஸ்தி கோயில், பத்மாவதி கோயில் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.

அதன்படி, முதல் நாள் காலை 6மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரயில் (எண்:22616)பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். வழியில், திருப்பூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

திருப்பதி, காளஹஸ்தி, பத்மாவதி கோயில் தரிசனத்தை நிறைவு செய்துவிட்டு,

2ம் நாள் (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் (எண்:22615), கோவையை இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை, சேர்கார் என தங்களுக்கு எது விருப்பமோ அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மொத்த கட்டணத்தில் பயணக் காப்பீடு, சுற்றுலா வழிகாட்டி, தரிசன டிக்கெட் கட்டணம், ஹோட்டலில் ஏசி அறையில் தங்கும் வசதி, முதல்நாள் இரவு உணவு, மறுநாள் காலை சிற்றுண்டி, வாகன வசதி உள்ளிட்டவைகளும் அடங்கும்.

வரும் ஏப்ரல் 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27, ஜூலை 4, 18, 25 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யவும், கட்டண விவரங்களை தெரிந்துகொள்ளவும் 9003140655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்த விவரங்களை www.irctctourism.com என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...