வால்பாறையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் வருகின்ற 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.


கோவை: வால்பாறையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் 19ஆம் தேதி காலை 11 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வட்டாட்சியரிடமும், பொள்ளாச்சி சார் ஆட்சியரிடமும் வழங்கலாம்.

மேலும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...