உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா வரும் 13ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர் செல்லும் பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையேயான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

நடப்பாண்டு திருவிழா கடந்த 28ம் தேதி மாலை 6 மணிக்கு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 4ம் தேதி கம்பம் போடுதல் நடைபெற்றது. கடந்த 6ம் தேதி நள்ளிரவு கிராமசாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.

இதனிடையே இந்த ஆண்டு சிறப்பம்சமாக புதிய தேர் வடிவமைக்கப்பட்டு தேரோட்டம் நாளை மறுநாள் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேரோட்டம் துவங்கும் மாரியம்மன் கோவில் பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ளது.

மேலும் தேரோட்டம் நடைபெறும் பழநி ரோடு, தளிரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு, தலைகொண்டம்மன் கோவில் வழியாக மீண்டும் பொள்ளாச்சி ரோட்டில் வந்து கோவில் அருகே நிலை நிறுத்தப்படும். இந்த பாதைகள் அனைத்தும் போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளாகும்.

குறிப்பாக பழனி வழியாக திண்டுக்கல் மதுரை செல்லும் பழனி பாதை மற்றும் தமிழகம் - கேரளாவை இணைக்கும் மூணாறு பகுதி செல்லும் சாலைகள் என அனைத்தும் போக்குவரத்து நிறைந்த சாலைகளாகும்.

தேரோட்டம் துவங்கி, கோவிலில் நிலைக்கு வரும் வரை தேரோடும் வீதிகளில் உள்ள முக்கியமான பழனி ரோடு, தளி ரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் சாலைகளில் போக் குவரத்து மாற்றம் செய்யப்படும்.



பொள்ளாச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உடுமலை வழியாக சென்று வரும் வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலையம், ராஜேந்திரா ரோடு, ரயில் நிலையம், ராமசாமிநகர் வழியாக, போடிபட்டி, வாளவாடி, முக்கோணம் வழியாக பொள்ளாச்சி சாலையில் செல்லும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



மேலும், பொள்ளாச்சியிலிருந்து பழநி வழியாக செல்லும் வாகனங்கள் இதே பாதையில் வரும் வகையிலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், பொள்ளாச்சி, திண்டுக்கல் நான்கு வழிச்சாலை உடுமலை நகரை ஒட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

பெரும்பான்மையான பகுதியில் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால் உடுமலை பாலப்பம்பட்டியில் காவல்துறை சார்பில் போர்டு வைக்கபட்டுள்ளது கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம் செல்லும் பேருந்துகள் , பாலப்பம்பட்டியில் இருந்து பிரியும் நான்கு வழிச்சாலை பயன்படுத்த வேண்டும்.

இதேபோல் கோவையில் இருந்து வரும் பேருந்துகள் ராகல்பாவி பிரிவு என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் நான்கு வழி சாலையை பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும்.

இதுகுறித்து உடுமலை போக்குவரத்து காவல்துறை சார்பில், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாலப்பம்பட்டி அருகே வழிகாட்டும் பதாகை அமைத்து வரும் தேரோட்டம் நடைபெறும் நாளை மறுநாள் (13ம் தேதி) மதியம் முதல் நள்ளிரவு வரை இந்த பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...