கோவை பிச்சனூர் ஊராட்சிக்கு தேசிய விருது - மத்திய அரசு அறிவிப்பு!

2023ம் ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மதுக்கரை தொகுதிக்கு உட்பட்ட பிச்சனூர் கிராம பஞ்சாயத்து தேசிய அளவில் சிறந்த நிர்வாகத்திற்காக சிறந்த பஞ்சாயத்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை பிச்சனூர் ஊராட்சிக்கு தேசிய அளவில் சிறந்த நிர்வாகத்திற்காக பஞ்சாயத்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகளை அங்கீகரித்து மேம்படுத்துவதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்திவருகிறது.

அதன்படி, 2023 ஆண்டு தேசிய விருதுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க 2022நவம்பர் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்து. இந்த விருதைப் பெற, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின்படி வழங்கப்பட்ட நிபந்தனைகளை அந்த பஞ்சாயத்து நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மதுக்கரை தொகுதிக்கு உட்பட்ட பிச்சனூர் கிராம பஞ்சாயத்து தேசிய அளவில் சிறந்த நிர்வாகத்திற்காக சிறந்த பஞ்சாயத்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய பஞ்சாயத்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே ஊராட்சி கோவை பிச்சனூர் ஊராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...