வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம் எதிரொலி - கோவையிலிருந்து புறப்படும் 3 ரயில்களின் நேரம் மாற்றம்!

கோவை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ரயில்களின் புறப்படும் நேரத்தை தென்னகவே ரயில்வே மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய கால அட்டவணைப்படி நாளை முதல் (ஏப்.9) ரயில்கள் இயக்கப்படவுள்ளது.


தமிழகத்தின் முதல் அதிவேக ரயில் சேவையான வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னை - கோவை இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் (புதன்கிழமை தவிர) இயக்கப்படவுள்ள இந்த வந்தே பாரத் ரயில் சேவையையொட்டி, கோவையிலிருந்து நாள்தோறும் புறப்படும் 3 முக்கிய ரயில்களின் நேரத்தை மாற்றி தென்னக ரயில்வே புதிய காலஅட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவையிலிருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:22666/22665), நாளை முதல் காலை 5.45க்கு பதிலாக 5 நிமிடம் முன்கூட்டியே 5.40க்கு இயக்கப்படவுள்ளது.

இதேபோல், கோவை -திருப்பதி சூப்பர் பாஸ்ட் (வண்டி எண்:22616) ரயிலானது காலை 6 மணிக்கு பதிலாக 6.10க்கு 10 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். கோவை - சென்னை இன்டர்சிட்டி (வண்டி எண்:12680) ரயிலானது 5 நிமிடம் தாமதமாக காலை 6.20க்கு கோவையிலிருந்து புறப்படும்.

மறுமார்க்கத்தில் (வண்டி எண்:12679) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும். இந்த புதிய கால அட்டவணையானது நாளை முதல் (ஏப்.9) முதல் நடைமுறைக்கு வரும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...