கோவையில் 10ஆம் தேதி தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம்

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதமரின் தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம்(PM NAM) கோவை அரசினர் தொழிற் பயிற்சி (மகளிர்) நிலையத்தில் வரும் 10ஆம் தேதி நடக்கிறது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதமரின் தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் வருகின்ற 10ஆம் தேதி நடைபெறுகிறது.

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதமரின் தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் (PM NAM) கோவை அரசினர் தொழிற் பயிற்சி (மகளிர்) நிலையத்தில் 10ஆம் தேதியன்று காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாமில் மத்திய/ மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோயம்புத்தூர், மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.

இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர். சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.

மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் NAC பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. தொழிற்பழகுநர் பயிற்சியின் போது உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு. என்சிவிடி, எஸ்சிவிடி மற்றும் COF தேர்ச்சி பெற்றவர்கள், உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்டதிறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம் கோயம்புத்தூர்-29 அவர்களை 9486447178, 9442651468 & 9840343091 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...