நீலகிரி மலைப்பயணத்துக்கு சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கோடைகால விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, குன்னூர் - நீலகிரி சிறப்பு ரயில், மேட்டுப்பாளையம் - நீலகிரி சிறப்பு ரயில், நீலகிரி - கெட்டி - நீலகிரி ரவுண்ட் ட்ரிப் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.



கோவை: மலைகளின் ராணி என்றழைக்கப்படுகின்ற நீலகிரிக்கு கோடை காலங்களில் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அங்குள்ள ரோஜா தோட்டம், படகு, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், கொண்டை ஊசி வளைவு, வெலிங்டன் போன்ற பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிடுவர். 

மேலும், நீலகிரியில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஊட்டி வறுக்கி, சாக்லெட், டீ போன்றவற்றையும் சுற்றுலாப் பயணிகள் விருப்பத்துடன் ருசித்து செல்வார்கள். இருப்பினும், நீலகிரியின் அழகை ரயிலில் பயணித்தவாறு ரசிக்க முடியுமா என எதிர்ப்பார்த்திருந்த சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மலைப் பயணத்துக்கான சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

குன்னூர் - நீலகிரி சிறப்பு ரயில்

குன்னூர் - நீலகிரி இடையே இரு மார்க்கத்திலும் தலா 43 முறை நீலகிரிக்கு காலையிலும், குன்னூருக்கு மாலையிலும் ஏப்ரல் 14 முதல் ஜீன் 25-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் நாட்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. குன்னூரிலிருந்து இருந்து நீலகிரிக்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மலை ரயில், காலை 9.40 மணிக்கு நீலகிரியை சென்றடைகிறது. 

அதேபோல், நீலகிரி இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயிலானது, மாலை 6.45 மணிக்கு குன்னூர் வந்தடைகிறது. குன்னூர், வெலிங்டன், அரவங்காடு, கெட்டி, லவ்டேல், நீலகிரி உள்ளிட்ட சந்திப்புகள் வழியே இந்த சிறப்பு ரயில் பயணிக்கின்றது. இந்த ரயிலில் முதல் வகுப்பில் 120 நபர்களும், இரண்டாம் வகுப்பில் 86 நபர்களும் பயணம் செய்ய முடியும். 

மேட்டுப்பாளையம் - நீலகிரி சிறப்பு ரயில்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை 11 முறை சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக நீலகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஏப்ரல் 16 முதல் ஜூன் 25ம் தேதி வரை 11 முறை ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு மலை ரயில், மதியம் 2.25 மணிக்கு நீலகிரியை அடையும். அதேபோல், நீலகிரி இருந்து நண்பகல் 11.25 மணிக்கு சிறப்பு மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்துசேரும். மேட்டுப்பாளையம், கல்லாறு, ஹில்குரோவ், குன்னூர், அரவங்காடு, கெட்டி, லவ்டேல், நீலகிரி உள்ளிட்ட சந்திப்புகள் வழியே இந்த பயணம் இருக்கும். 

இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும்பொழுது முதல் வகுப்பில் 40 பயணிகளும் இரண்டாம் வகுப்பில் 140 பயணிகளும் செல்லலாம். குன்னூரில் இருந்து நீலகிரி மார்க்கமாக செல்லும் பொழுது முதல் வகுப்பில் 80 பயணிகளும் இரண்டாம் வகுப்பில் 140 பயணிகளும் பயணம் செய்ய முடியும். 

நீலகிரி - கெட்டி - நீலகிரி ரவுண்ட் ட்ரிப் சிறப்பு ரயில்

நீலகிரியிலிருந்து கெட்டி சென்று மீண்டும் நீலகிரிக்கே ரவுன் ட்ரிப் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளொன்றுக்கு மூன்று முறை ஏப்ரல் 14 முதல் ஜீன் 25 ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் நாட்களிலும், சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. 

காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கும், 11.30 மணிக்கு புறப்பட்டு 1.30 மணிக்கும், 3 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கும் நீலகிரியிலிருந்து புறப்பட்டு கெட்டி சென்று மீண்டும் நீலகிரிக்கே சிறப்பு ரயில் வந்தடையுன். நீலகிரி, லவ்டேல், கெட்டி உள்ளிட்ட சந்திப்புகள் வழியே பயணிக்கின்றது. இந்த ரயிலில் முதல் வகுப்பில் 120 பயணிகளும் இரண்டாம் வகுப்பில் 86 நபர்களும் பயணிக்கலாம்.

தென்னக ரயில்வே அறிவிப்புக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு 

நீலகிரி சுற்றுலா பயணிகள் தென்னக ரயில்வே இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பளித்துள்ளனர். நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்க்க விரும்புவர்கள் மலைமுகடுகளை சிறப்பு மலை ரயில் பயணத்தின் மூலமாக கண்டு ரசிக்கலாம். மித வேகமாகவும் சில இடங்களில் சற்று கூடுதல் வேகமாகவும் இயற்கையை ரசிக்கும் வகையிலே இந்த சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

இதனை மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருக்கும் சுற்றுலாப்பயணிகள் மலைகளின் ராணி நீலகிரிமலைமுகடுகள் வழியே தவழ்ந்து செல்லும் அனுபவத்தை தர காத்திருக்கும் இந்த சிறப்பு மலை ரயில் சேவையினை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் இந்த அறிவிப்புக்கு தென்னக ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...