கோவை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு

கோவை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை (ஏப்.4ஆம் தேதி) முன்னிட்டு மதுபானக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்களை மூடும்படி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுப்பான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுக்கூடங்கள், மதுபானக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டலில் செயல்படும் மதுக்கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் Dry Day ஆக கடைபிடிப்பதால் மூட வேண்டும்.

விதிமுறைகளுக்கு முரணாக அந்த தேதியில் விற்பனை செய்பவர்கள் மீது, சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...